கொரோனா வைரசால் இத்தாலி பிரதமர் கண்ணீர்விட்டாரா? ஓர் அலசல்

Must read

எல்லா காலங்களிலும் போலிச் செய்திகள் புரளியாக மாற்றப்பட்டு மக்களிடையே ஒரு பரிதாபத்தினை உருவாக்கிட முயற்சி செய்துவருகின்றனர்,
அப்படிப்பட்ட ஒன்றுதான் இப்போது நாம பார்க்க விருப்பது

டுவிட்டர், பேஸ்புக் பின்ற சிலவற்றில் மார்ச் 22, ஞாயிறன்று ஒரு பதிவு இருந்தது

இத்தாலியின் அழுகிற பிரதமர் புகைப்படத்தினை பாருங்கள்

படம்


சுகாதாரத்துறையில் நல்ல வசதிகள் இருந்தபோதும் கொரோனா வைரசை விளையாட்டாக எடுத்துக்கொண்டு அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டதால் தங்கள் விளைவாக அதிகமான மக்களை இழந்துவிட்டதாகவும், மக்களின் உடலை புதைக்கஅடக்கம் செய்ய இடமில்லை என்று இத்தாலி பிரதமர் கண்ணீர்மல்ல தெரிவித்ததாக அந்த சமூக வலைத்தள பதிவு இருந்தது,

இதை பல ஆயிரம் பேர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் இருந்தனர்

போலி என்று கண்டறிந்த விதம்

ஆனால் அந்தப் புகைப்படத்தினை மட்டும் கூகிள் reverse image முறையில் தேடிப்பார்த்ததில் அந்தப் படம் பிரேசில் ஜனாதிபதி படம் என்று தெரிந்தது

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ இந்த செவ்வாய்க்கிழமை 17,டிசம்பர் அன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனக்கு 2வது வாழ்க்கை கொடுத்த கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக அந்தப் புகைப்படம் இடம் பெற்றிருந்தது, ஆனால் சமூக வலைதள வாசிகளோ அந்தப் புகைப்படத்தினை இத்தாலி பிரதமர் என்றும், மக்களை காக்க முடியவில்லை என்று கண்ணிர் விட்டதாகவும் தவறான செய்தியை பதிப்பு இருந்தனர்

ஆதாரம் இணைப்பு

இணையத்தள முகவரி

Bolsonaro chora ao lembrar de facada, em culto evangélico no Planalto

யூடியூப் காணொளி இணைப்பு

ஆனால் இந்த தலைப்பில் இன்னமும் செய்திகள் உலா வந்தவண்ணம் இருக்கின்றன. எனவே கவனமாக இருங்கள்

செல்வமுரளி

More articles

Latest article