புதுடெல்லி:

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் அரசு 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டித் தந்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தவறான புள்ளிவிவரத்தை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டித்தரப்பட்டது என்றும், தமது 5 வருட ஆட்சியில் பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1 கோடியே 25 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டதாக பிரதமர் கூறியிருந்தார்.

இடைக்கால பட்ஜெட்டிலும் மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல் இதையே கூறியிருந்தார்.

கிராமப்புற வீடுகட்டும் திட்டம் புதிதாக இல்லாமல் இருக்கலாம். நகர்ப்புற வீடுகட்டும் திட்டம் ஏற்கெனவே அமலில்தான் உள்ளது.
சுதந்திரத்துக்குப் பின்னர் அகதிகளுக்கு புகலிடம் தரப்பட்டது. அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. 1980-ம் ஆண்டு வரை கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தில் ஒரே மாதிரியான கொள்கை ஏதும் இல்லை.

சில மாநில அரசுகள் தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ், வீடு கட்ட அரசு பாதி தொகை தரும். மீதித் தொகையை வீடு கட்டுபவரே செலுத்த வேண்டும்.

இந்த தொகை மறு சீரமைப்புப் பணிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்காக வீடு கட்ட இந்திரா அவாஜ் யோஜ்னா திட்டத்தை இந்திரா காந்தி கொண்டு வந்தார்.

1989-ல் அவாஜ் யோஜ்னா திட்டம் தொடங்கப்பட்டபோது, இந்திரா அவாஜ் யோச்னாவும் அதன் ஒரு பகுதியாக இருந்தது. ஜவஹர் ரோஜ்கார் யோச்னா பட்ஜெட்டிலிருந்து 6 சதவீதத் தொகை இந்திரா அவாஜ் யோஜ்னாவுக்கு மாற்றப்பட்டது.

முன்னாள் ராணுவத்தினர், பாதுகாப்புப் படையினர், பாரா மிலிட்டரி படைகள் ஆகியவற்றுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

கடந்த 1996-ம் ஆண்டு ஜவஹர் ரோஜ்கார் யோச்னாவிலிருந்து பிரிந்த இந்திரா அவாஜ் யோச்னா சுதந்திரமாக செயல்படத் தொடங்கியது.

2003-4 வரை இந்திரா அவாஜ் யோச்சனா திட்டத்தின் கீழ் 1,15,05,109 வீடுகள் கட்டப்பட்டன. 2007-ம் ஆண்டு வரை,1,53,94,375 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
2005-06 முதல் 2008-09 ஆண்டுகளில் 60 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை விட அதிகமாக 71.76 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன.

இரண்டாவது கட்டமாக, 2010-11 முதல் 2013-14 வரை 1 கோடியே 20 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1 கோடியே 18 லட்சத்து 5 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.

2004-05-ம் ஆண்டு அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கையின்படி, 15,21,305 வீடுகள் கட்டப்பட்டன.
அதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இரு முறை அமைந்த ஆட்சியில், 2 கோடியே 5 லட்சத்து, 47 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன.

மோடி ஆட்சியின் 2014-15 ஆண்டுகளில் ரூ. ரூ. 1,17,039 லட்சம் செலவில் 3,33,82,000 வீடுகள் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2013-14ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை கடந்த 4 ஆண்டுகளாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையத்தில் ஏற்றவில்லை.

2009-2014 வரை இந்திரா அவாஜ் யோஜ்னா திட்டத்தின் கீழ், 1,23,00,000 வீடுகள் கட்டப்பட்டன.கடந்த 2009-2014 ம் ஆண்டு வரை 86,97,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ஆனால், தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டிருந்ததாக பிரதமர் மோடி கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை என்பது எளிதாகப் புரியும்.