சிம்லா:

மாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் இன்று காலை 37 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

முகமது தில்ஷாத் என்ற பெயர் கொண்ட அந்த நபர் உனாவின் பங்கர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு கொட்டகையின் கீழ் தற்கொலை செய்து கொண்டார். கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவருக்கு சோதனை நடத்தப்பட்ட நிலையில், சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இருந்த போதும் இந்த சோதனையின் போது, சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு தனிமைப்படுத்தப்பட்டார்.

இவர் டெல்லியின் நிஜாமுதீனில் இருந்து திரும்பிய தப்லிகி ஜமாஅத் உறுப்பினரின் தொடர்ப்பு கொண்டிருந்தது கண்டுபிடிக்கபட்டுள்ளதாக சதர் எஸ்.எச்.ஓ தர்ஷன் சிங் கூறினார்.

இது குறித்து டிஜிபி சீதா ராம் மார்டி கூறுகையில், “இந்த நபர் கொரோனா நோயாளி என்று கிராம மக்கள் சந்தேகப்படுவதாகவும், அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிந்த பின்னர், அவர் தனது கிராமத்திற்கு திரும்பியபோது, ​​அவர் சமூகத்தினரால் புறக்கணிக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். ” என்று தெரிவித்துள்ளார்.