சென்னை:

மிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்ச்ர்கள்   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்  உள்பட  அமைச்சர்கள் அகல்விளக்கு ஏற்றினர்.

அதுபோல நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுல பிரபலங்களும் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றை ஏற்றி தங்களது கொரோனாவுக்கு எதிரான போரில் ஒற்றுமை வெளிப்படுத்தினர்.

கொரோனாவை ஒழிப்பதில் 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.  நம்மில் ஒரு சிலர், நாம் மட்டுமே கொரோனாவை ஒழித்து விட முடியுமா? என்று நினைக்கிறார்கள். அது தவறு. நாம் தனிநபர் அல்ல. 130 கோடி மக்களின் பலம், ஒவ்வொருவருக்கும் உள்ளது.  நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் மின்சார விளக்குகளை அனைத்துவிட்டு அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் லைட், செல்போன் லைட்டுகளை ஏற்றி ஒளிரவிடுமாறு மக்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இன்று இரவு 9 மணிக்கு அனைத்துதரப்பு மக்களும் மின்விளக்கை அனைத்து விட்டு,  ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் தீபங்களை ஏற்றினர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட  அமைச்சர்சகள் அகல்விளக்கு ஏற்றினர்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுலக பிரபலங்களும் பிரதமரின் வேண்டுகளை ஏற்று விளக்குகள் ஏற்றினர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் ஜாதி மத இன வேறுபாடு இன்றி விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.