facebook

நம்ம சாதி பொண்ணுங்க facebook லைக் பண்ணலையே!: இப்படியும் ஒரு பேஸ்புக் புலம்பல்

பேஸ்புக் ( facebook ) எனும் முகநூலில் நிறைய பிரச்சினைகளை சரமாரியாக அலசுகிறார்கள் நெட்டிசன்கள். தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள். அவர்களில் சிலரது ஆதங்கம் வித்தியாசமாய் இருக்கிறது.

தங்களது இனத்தைச்சேர்ந்த பெண்கள் தங்களை விரும்புவதில்லை என்பதுதான் அந்த ஆதங்கம்.

அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவரது பதிவு இது :

“ஜாதி மாறி காதலிக்கும் “நம்ம சாதி” பெண்ணை பிரித்தோம் ! காதலை தடுத்து நிறுத்தினோம் என்று வீணா போஸ்ட் போடவேண்டாம் ! கிட்டத்தட்ட ஏழு ஆண்டு காலமாக “நம்ம சாதி இயக்கங்கள்” அதி தீவிரமாக இருகின்றது .

“நம்ம” சாதி பெருமை என்ன.. குலப் பெருமை என்ன… நம் குடும்பத்துக்கு ஊருக்குள் இருக்கும் அந்தஸ்து என்ன… ! இது எல்லாம் “நம்ம” சாதி பெண்ணுகளுக்கு தெரியாதா ? அப்படி தெரியத பொண்ணுகள் அப்பா அம்மா நம்ம ஒரிஜினல் சாதிக்காரங்களா இருக்க முடியாது .

அப்படிப்பட்ட பெண்களை அப்படியே விட்டு விடவேண்டும் அவர்கள் எதிர் கால வாழ்கையில் அடி படும்போது அவர்கள் வாழ்கையை ஒரு உதரணமாக மற்றவர்களுக்கு காட்டலாம் .

நம்ம சாதி தலைவர்கள் போட்டோ போட்டா ஆயிரம் லைக் வருது. அதுல எத்தன லைக் நம்ம ஜாதி பொண்ணுக போடுது?? நம்ம ஜாதி பொண்ணுக facebookla இல்லை என்று சொல்லாதீங்க ! நம்ம பசங்கள எல்லாம் பிளாக் செஞ்சுட்டு மற்ற ஜாதி பசங்கள add செஞ்சு வச்சு இருக்காங்க ! நம்ம ஜாதி சம்மந்தமான போஸ்டுக்கு லைக் போட்ட மற்ற ஜாதி பசங்க தப்ப நினபாங்கனு ஒரு எண்ணம் வேறு…!”