டெக்ஸாஸ்
மேற்கு டெக்ஸாஸ் நகரில் முகநூல் 379 மெகாவாட் திறனுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது.
டெக்ஸாஸ் நகரில் முகநூல் நிறுவனத்தின் டேட்டா செண்டர் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. . முகநூல் நிர்வாகம் தனது டேட்டா செண்டர்களுக்கு முழுக்க முழுக்க புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி மூலம் மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளது. தற்போது உருவாகி வரும் டெக்ஸாஸ் நகர் டேட்டா செண்டருக்கு மெக்சிகோ அரசிடம் இருந்து மின் இணைப்பு கிடைப்பதில் சிரமம் உள்ளது.
மெக்சிகோ மின் இணைப்பு துறை இந்த இணைப்புக்காக கட்டணங்களை 3.9 கோடி டாலருக்கு உயர்த்தி உள்ளது. இந்த டேட்டா செண்டருக்கு மின்சாரம் அளிப்பதன் மூலம் மற்ற சில்லறை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் மின் துறை காரனம் கூறியது. இதனால் முகநூல் நிர்வாகம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இதை ஒட்டி முகநூல் நிர்வாகம் இந்த பகுதியில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்க உள்ளது. 379 மெகாவாடி திறனில் அமைக்கப்பட உள்ள இந்த மின் நிலையம் 7 சதுர மைல் அதாவது 18 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைய உள்ளது. இது நியூயார்க் கில் உள்ள செண்டிரல் பார்க்கை போல் ஐந்து மடங்கு பரப்பாகும். இந்த மின் நிலையம் அந்த பகுதியில் உள்ள 72000 இல்லங்களுக்கு மின்சாரம் வழங்க உள்ளது.