பேஸ்புக் நிறுவனம் 2012ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் புகைப்பட இணையத்தளத்தினையும், 2014ம் ஆண்டு வாட்ஸ்அப் செயலி நிறுவனத்தினையும் வாங்கியது. இரண்டுக்கும் ஒரு பில்லியன் பயனாளர்கள் உள்ளது குறிப்பிட்டத்தக்கது.
தனது பெரும்பாலான வருவாயை தனிநபர் கொள்கை சார்ந்த விசயங்களில் பெரும் தொகையை கட்ட வேண்டிய நிலையில் தங்களுடய வருவாய்க்காக இன்ஸ்டாகிராமினை இன்னமும் வலுப்படுத்த உள்ளது. அதிகமான இளைஞர்கள் இந்த செயலி பயன்படுத்துவதால் அதிக விளம்பர தாரர்களையும் இணைக்க இந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது
இந்த நிலையில்தான் இன்ஸ்டாகிராமில் உள்ள புகைப்படங்களில் சிறியதாக Instagram from Facebook என்று சிறியதாக சேர்த்து வருகிறது.
விரைவில் வாட்ஸ்அப் செயலியிலும் இதுபோன்ற செய்தி இடம்பெறும் என்று பேஸ்புக் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்
-செல்வமுரளி