ந்த ஆண்டில் முதல் காலாண்டில் பேஸ்புக் நிறுவனம் 220 கோடி போலி கணக்குகளை நீக்கி யுள்ளது. தனிநபர் உரிமைகளால்  பெரும் சிக்கல்களை  எதி்நோக்கியுள்ள பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களை மிக உன்னப்பாக கவனத்துவருகிறது, இதில் போலி கணக்குகளை கண்டறிந்தும் நீக்கிவருகிறது,. கடந்த 2018 ம் வருடத்தின் முதல் காலாண்டில் 150 கோடியாக இருந்து போலி கணக்குகள் இந்த வருடம் 220 கோடியாக உயர்ந்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் மருந்து மற்றும் துப்பாக்கி விற்பனை குறித்தான 15 லட்சம் பதிவுகளையும் பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து தவறான பரிவர்த்தனைகள் ஏதேனும் நடந்துவருகிறதா என்று உன்னிப்பாக கண்டறிவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் இந்த வருடம் பேஸக்புக் பாதுகாப்பு பணிகளுக்காக தாம் ஈட்டிய லாபத்தினை விட அதிகமாக முதலீடு செய்வதாகவும், இதன் மூலம் பேஸ்புக் பயன்பாட்டின் பாதுகாப்பு அதிகரிப்பதால் மக்கள் மிக அதிக அளவில் நம்பிக்கையுடன் பயன்படுத்துவார்கள்  என்றும் தெரிவித்தார்

அதோடு, பேஸ்க்புக் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு செயலிகள் பேஸ்புக்கில் உள்ள பதிவுகள் மட்டுமல்லாமல் அதில் கொடுக்கப்படும் படங்களின் தன்மையையும் கண்டறிந்து ஒருவேளை அப்படங்கள் பேஸ்புக் விதிகளுக்கு புறம்பாக இருந்தால் உடனடியாக நீக்குவதாகவும் , விரைவில் பேஸ்புக்கில் வழியே கொடுக்கப்படும் லைவ் வீடியோ ( நிகழ்நேர காணொளி) உள்ள பதிவுகளையும் கண்டறிந்து அவை தம் விதிகளுக்கு புறம்பாக இருந்தால் அவற்றினை உடனடியாக நீக்கவும் முயற்சிகள் எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

-செல்வமுரளி