வெலிங்டன்:

கிறிஸ்த்சர்ச் மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை நேரடி ஒளிபரப்பு செய்த ஃபேஸ்புக்கை தார்மீகமற்ற பொய்யர்கள் என நியூசிலாந்தின் தனிநபர் பாதுகாப்பு ஆணையர் விமர்சித்துள்ளார்.


தமது ட்விட்டர் பக்கத்தில் நியூசிலாந்து ஆணையர் ஜான் எட்வர்டு வெளியிட்ட பதிவில், நியூசிலாந்தில் கிறிஸ்த்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதை ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தனர். இதனை ஏராளமானோர் பகிர்ந்தனர்.

இத்தகைய செயல் நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெனை எரிச்சலையடைய செய்தது. இதன்மூலம் ஃபேஸ்புக் நம்பிக்கையற்றதாகிவிட்டது.

தற்கொலை செய்து கொள்வதை, கொலை செய்வதை நேரடி ஒளிபரப்பு செய்வதை ஃபேஸ்புக் நிறுவனம் எப்படி அனுமதிக்கலாம். இத்தகைய தவறுக்கு பொறுப்பேற்கவும் மறுக்கிறார்கள். ஃபேஸ்புக் என்பது தார்மீகமற்ற பொய்யர்கள் என்பது நிரூபணமாகிறது.

இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் ஜுகெர் பெர்க் கூறும்போது, நேரடி ஒளிபரப்பு செய்தது தவறான மனிதர்களாக இருப்பார்கள். அதற்காக தொழில்நுட்பத்தை மோசம் என்று கூறமுடியாது. நேரடி ஒளிபரப்பின்போது எத்தகைய மாற்றத்தையும் உடனே செய்ய முடிவதில்லை. சற்று தாமதம் ஏற்படுகிறது என்றார்.