சமூக வலைதளமான பேஸ்புக் வலைதளம் உலகம் முழுவதும் மக்களின் அமோக வரவேற்பை பெற்று முன்னணி சமூக வலைதளமாக உள்ளது.
சாமானிய மக்கள் முதல் உயர் பதவிகளில் உள்ளவர்களும் பேஸ்புக்கை பயன்படுத்தி, தங்களது கருத்துக்களை பதிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பேஸ்புக் வலைதளத்தில் பிரபலமானவர்களின் முகநூல் பக்கத்தைத் போன்று, போலியாக பேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டு, தவறான தகவல்களை சிலர் பதிவேற்றி, அவர்களது பெயருக்கு களங்கம் கற்பித்து வருகின்றனர்.
இது பெரும் அதிர்ச்சியையும், வலைதளத்தில் பாதுகாப்பின்மையையும் காட்டுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம், அதை பயன்படுத்துபவர்களின் உண்மையைத்தன்மை குறித்து, பயனாளர்களின் புகைப்படத்தை பதிய உத்தரவிட உள்ளது. இந்த புதிய விதிமுறையால் போலி அக்கவுண்டுகள் தவிர்க்கப்படும் அல்லது நீக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போலி கணக்குகள் குறித்து ஏராளமான புகார்களை வந்ததை தொடர்ந்து, போலியான சந்தேகத்திற்கு இடமான கணக்குகளை சோதனை செய்து அதனை நீக்கம் செய்ய ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது முயற்சி செய்து வருகிறது.
இதன் அடுத்தபடியாக, பேஸ்புக் பயனாளர்கள் அனைவரும் தங்களின் புகைப்படத்தை பதிவிட வேண்டும் என்றும், ஒரு பயனாளர் ஒரு புகைப்படத்தை மட்டுமே பதிவிட முடியும் வகையில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்க முன்வந்துள்ளது.
அதன்படி, ஒரு பயனாளர், வேறு எந்தவொரு பேஸ்புக் அக்கவுன்டையும் லாகின் செய்ய முடியாது. இந்த புதிய முயற்சி விரைவில் வெளியாகும் என ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் இந்த அதிரடி முயற்சி விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக போலி அக்கவுண்டுகள் நீக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.