நியூயார்க்: தடுப்பு மருந்துகளைவிட, முகக்கவசமே கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பைத் தரும் என்று கூறியுள்ளார் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர்.

இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு நிகரானது அமெரிக்காவின் அந்த அமைப்பு.

அந்த இயக்குநர் கூறியுள்ளதாவது, “முகக்கவசமே நமக்கான சிறந்த பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான அறிவியல் ஆதாரமும் கிடைத்துள்ளது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து எந்தளவிற்கு தாக்கம் வாய்ந்ததோ, அதைவிட முகக் கவசம் பாதுகாப்பானது”என்றுள்ளார் அவர்.

கொரோனா தடுப்பு மருந்து, இந்தாண்டு இறுதியிலோ அல்லது அடுத்தாண்டு துவக்கத்திலோ தடுப்பு மருந்துகள் வரலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அந்த மருந்துகள் எந்தளவிற்கு தாக்கம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை அறுதியிட்டு சொல்லிவிட முடியாது. இந்நிலையில், நமக்கு முகக்கவசமே பெரிய பாதுகாப்பு என்பதை வலியுறுத்துவதாக உள்ளது அவரின் கருத்து.