
சென்னை: சீனாவைச் சேர்ந்த பிஒய்டி என்று அழைக்கப்படும் நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க உதவும் வகையில், முகக் கவசம் தயாரிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையை தமிழகத்தில் துவங்கி இருக்கிறது.
இந்த பிஒய்டி நிறுவனமானது சீனாவைச் சேர்ந்த பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமாகும். இதற்கு தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதுார் அருகே ஆலை உள்ளது.
இந்நிலையில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்த ஆலையானது, முழுத்திறனில் இயங்கி வருகிறது. இந்த ஆலை, நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முகக் கவசங்கள் தயாரிக்கும் திறன் கொண்டது.
மேலும், நாள் ஒன்றுக்கு, 3 லட்சம் கிருமி நாசினி பாட்டில்களை தயாரிக்கும் திறனும் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel