டில்லி
கடந்த 10 நிமிடங்களுக்கும் மேலாக முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் பணி செய்யவில்லை.
முன்பு நீர் இன்றி அமையாது உலகு என்னும் பழமொழி எவ்வளவு சரியாக அமைந்ததோ அதைப்போல் தற்போது இணையம் இன்றி இயங்காது உலகு என்பது புது மொழியாகி உள்ளது.  அந்த அளவுக்கு சமூக வலைத் தளங்கள் பெரும்பாலானோர் வாழ்வில் இன்றியமையதாகி விட்டது.
இந்நிலையில் முக்கிய வலைத் தளங்களான முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத் தளங்களும் கடந்த பத்து நிமிடங்களுக்கும் மேலாக இயங்கவில்லை.  பலரும் தங்களது அலைப்பேசி அல்லது கணினியில் ஏதோ பிரச்சினை என நினைத்து அலை மோதி உள்ளனர்.
தற்போது இது தொழில்நுட்ப கோளாறு என டிவிட்டரில் பல செய்தி ஊடகங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது எப்போது சரியாகும் என்பது குறித்த தகவல் இன்னும் வரவில்லை.