1983ம் ஆண்டுக்கு பிறகு தைவானில் மீண்டும் கண்டறியப்பட்ட அரியவகை சிறுத்தை…!

Must read

தைபே: தைவானில் 1983க்கு பிறகு அரிய வகை சிறுத்தை இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் ஒரு வருட கடுமையான தேடலுக்குப் பிறகு, அலங்கி என்ற கிராமத்தில் ரேஞ்சர்கள் இந்த சிறுத்தைகளை இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கண்டனர்.

ஒரு முறை குன்றின் மீது ஆடுகளை அந்த சிறுத்தைகள் வேட்டையாடுவதைக் கண்டனர். மற்றொரு முறை அருகில் உள்ள மரம் ஒன்றில் தாவிச் சென்றபோது பார்த்துள்ளனர்.

2008ம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட விலங்கின பட்டியலில் இந்த சிறுத்தை இடம்பெற்றுள்ளது. 2013ம் ஆண்டு இந்த சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக ஒரு கட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

தென்கிழக்கு ஆசியாவின் யுஷான் மலைத்தொடரின் மேல் பகுதிகளில் இந்த சிறுத்தைகளை அதிகம் நடமாடி வருகின்றன என்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, பைவான் பழங்குடியினர் கூற்றுப்படி, அவை உயிருடன் தான் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக தென்படும் பட்சத்தில் அடுத்தக்கட்ட ஆராய்ச்சியை முன்னெடுக்க வனவியல் வல்லுநர்கள் முடிவு செய்துள்ளனர்.

More articles

Latest article