சென்னை:

தமிழகத்தில்  அனுமதி இல்லாமல் இயங்கும் பெண்கள் விடுதிகள் பிப்ரவரி 28ந்திக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், பதிவு செய்யாத  விடுதிகளை மார்ச் 1ந்தேதி முதல்  மூட நடவடிக்கை எடுக்க   வேண்டும் என்று உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும்  பெண்கள் விடுதிகளை முறைப்படுத்தும் வகை யில், அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் விடுதிகள் உடடினயாக பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.  இதற்காக கால அவகாசம் 3வது முறை யாக பிப்ரவரி 15ந்தேதி வரை  நீட்டிக்கப்பட்டது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 2000 பெண்கள் விடுதிகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், 25 சதவிகித விடுதிகள் மட்டுமே இதுவரை  பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை பின்பற்றும் பெண்கள் விடுதிகளுக்கு பிப்ரவரி 28ந் தேதிக் குள் தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம்,  அனுமதியின்றி செயல்படும் பெண்கள் விடுதியை மார்ச் 1ந் தேதிக்கு பிறகு நிச்சயமாக மூடி விட வேண்டும்.  அனுமதியில்லாமல் மார்ச் 1ந் தேதிக்கு பிறகு பெண்கள் விடுதி செயல்படக்கூடாது என்றும் அதிரடி உத்தவு பிறப்பித்து உள்ளது.