சென்னை:
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளை அளித்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கரோனா பரவல் விகிதத்திற்கேற்பவும், பொருளாதார இழப்பை ஈடுசெய்யவும் அவ்வபோது தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுவந்தது.

அந்தவகையில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மீண்டும் பொதுமுடக்கத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel