சென்னை
தெற்கு ரயில்வே தெலுக்கானா மாநிலத்தில் உள்ள காச்சிகுடா – நாகர்கோவில் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நீட்டித்துள்ளது/

நேற்று தெற்கு ரயில்வே,
”பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா-நாகர்கோவில் இடையிலான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நீட்டிக்கப்படும்.
அதன்படி, காச்சிகுடாவில் இருந்து வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் 11-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்-07435) இயக்கப்படுகிறது.
அதே போல, நாகர்கோவிலில் இருந்து வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் 13-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) காச்சிகுடாவிற்கு சிறப்பு ரயில் (07436) இயக்கப்படுகிறது. ”
என அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel