நெட்டிசன்: (வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் பதிவுகள் வெளியாகும் பகுதி)
டைரக்டர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுந்தர இளங்கோவன், ‘அர்த்தநாரி’ என்ற படத்த இயக்கியிருக்கிறார். இந்த படம் குறித்து, “ஜி.விஜயபத்மா எழுத்தாளர் இயக்குநர்”, தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
” அநீதிக்கு நீதி அழித்தல் அல்ல” என்று caption போட்டு என் இயக்குநர் பாலா அவர்களுக்கு, என்று படத்தை துவங்கும் “இயக்குநர்” சுந்தர இளங்கோவன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
யாராவது “ரியல் எஸ்டேட் டுபாக்கூர்” ஆம்பளப் புள்ளை பெத்திருக்கான்னு தெரி ஞ்சா அந்தாளை மடக்கி,உசுப்பேத்தி 50லட்சத்துல படம் எடுத்துறலாம் உன் பையன் ஹீரோ என்று சொல்லி “பிகர்”களை ஹீரோயின்களா காட்டி படத்தை இயக்கிட வேண்டியது. ஆனால்படம்முடிக்கும்போது அது 1.50 கோடி ஆகி இருக்கும். அதுவேற விசயம்.
அந்த ரியல் எஸ்டேட் பெரிய “மசாலா மண்டையா” இருந்தா இயக்குநரே இன்னொரு ஹீரோ ஆயிட வேண்டியது. அப்படி யாரும் மாட்டலன்னா இருக்கவே இருக்கார் இயக்குநர் விக்கிரமன் நெகிழ்ந்து உருகிய, “கருணை வள்ளல், கலியுக கர்ணன்,கொடை வள்ளல் பாரிவேந்தன்” அவரை சந்தித்து “casting” காட்டி படம் எடுத்துட வேண்டியது.
மனம் கொதிக்குது. அருமையான கதைகளோட எத்தனை திறமை மிக்க இளம் இயக்குநர்கள் ஏழ்மையுடன் போராடிக்கொண்டு காத்துக்கிட்டு இருக்காங்க. உங்களுக்குப் படம் கிடைச்சா அதை உருப்படியா பண்ணக் கூடாதா?
படத்துல நடிக்கிற பெண் கதாபாத்திர நடிகைகளைப் பார்க்கும் போதே நீங்கள் எப்படி படம் பண்ணியிருப்பீர்கள் எனப் புரிகிறது. இதற்கு ஏம்பா பாலா என்கிற இயக்குநருக்கு நன்றி போட்டு அவரை அசிங்கப்படுத்துறீங்க?
அதேமாதிரி இந்த உலகப்புகழ் பெற்ற கதைக்கு உரிமைப் பிரச்னை வந்துடும்னு கதைன்னு தன் பேர்ல போட்டுக்கிட்ட அந்தம்மா (தயாரிப்பாளர்) முத்தமிழ் வாழ்க.
இயக்குநரே.. அந்த ஒன்லைன் caption (“அநீதிக்கு நீதி அழித்தல் அல்ல” ) ஏன் போட்டீங்க? அதுக்கு அர்த்தம் தெரியுமா?