விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர  வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இது பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில்  சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பட்டாசு ஆலைகள் உள்ளன. விருதுநகா் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1500  பட்டாசு  ஆலைகள் செயல்படுகின்றன. இதில்  பல ஆலைகள் முறையான பாதுகாப்பு வசதிகளுடன் செயல்படுவது இல்லை. இதனால் அவ்வப்போது வெடிவிபத்துகள் ஏற்படும் பலர் உயிரிழப்பதும் சகஜமாகி வருகிறது.

இந்த  மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வானம் பாரத்த பூமியான இருப்பதால்,  விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால்,  பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சுமாா் ஏழு லட்சம் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.  இவர்களில் 50 சதவிகிதம் பேர் பெண்கள் கூறப்படுகிறது. இங்குள்ள  ஆலைகள் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு இன்றி செயல்பட்டு வருகின்றன. இதை கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகளும்  முறையாக செயல்படுவது இல்லை. இதனால், இந்த பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில்  அடிக்கடி  விபத்துகள் நிகழ்கின்றன.

இந்த நிலையில்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  மாயதேவன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் புலி குட்டி, கார்த்திக் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வெடி விபத்து ஏற்பட்ட பகுதிக்கு தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.