கண்ணூர்:

கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் வளையகண்டான் ரகுவுக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது.

இதனால் கட்டடத்தில் பெரும் சேதம் அடைந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அ க்கட்டடத்தில் இருந்து அரை கிலோ அளவு கொண்ட வெடி மருந்தை போலீசார் கைப்பற்றினர்.

இதேபோல் கடந்த செப்டம்பரில் கண்ணூரில் கோட்டத்தியில் வைரிகதாக்கன் பகவதி கோவில் அருகில் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவில் அலுவலகத்தில் இருந்து 7 வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். இவை வாளியில் சாக்கு சுற்றி வைக்கப்பட்டிருந்தது.