டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்ந்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை தாக்கம் உச்சம் பெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.
நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்தியாவில் 3வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு வரும். ஏற்கனவே கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் ரெட்டிஸ் லேபாரட்டிரிஸ் என்ற நிறுவனம் பரிசோதித்து வருகிறது. இந் நிறுவனம் இந்தியாவில் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரியது. இதையடுத்து, நிபுணர் குழு ஆய்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.6% செயல் திறன் மிக்கவை என்பது குறிப்பிடத்தக்கது.