ஸ்வீடனில் வேலையே பார்க்காமல் வாழ்நாள் முழுவதும் சம்பளம்: ஓவியர்களின் அறிவிப்பால் பரபரப்பு

Must read

கோதென்பர்க்:

நினைத்துப் பாருங்கள்… வாழ்நாள் முழுவதும் வேலையே பார்க்க வேண்டியதில்லை. திரைப்படம் பார்க்கலாம், புத்தகங்கள் படிக்கலாம், உறங்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
தினமும் வருகைப் பதிவேட்டில் பஞ்ச் செய்து வரவேண்டும் அவ்வளவுதான்.


இது நிரந்தரமான வேலைதான். மறுபடியும் வேறு ஒரு வேலையை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
கடந்த 2017-ம் ஆண்டு ஸ்வீடனின் பொது ஓவிய ஏஜென்ஸியும் சுவீடன் போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து போட்டியை அறிவித்தன.

புதிய ரயில் நிலைய வடிவமைப்பு போட்டியில், சர்வதேச அளவில் ஓவியர்கள் பங்கேற்கு வகையில் இந்த அறிவிப்பு வெளியானது. இதில், வெற்றி பெறும் ஓவியருக்கு 7லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஸ்வீடனைச் சேர்ந்த சிமன் கோல்டின் மற்றும் ஜேக்கோப் சென்னபி ஆகியோர் இணை ஏற்கெனவே வங்கிகளில் புதிய வடிவமைப்பை செய்து வெற்றி பெற்றவர்கள்.

தாங்கள் வெற்றி பெற்றால், ஒரு ஊழியருக்கு வாழ்நாள் முழுவதும் வேலையே பார்க்காமல் சம்பளம் வழங்குவோம் என்று அறிவித்துள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள பரிசுப் பணத்தை முதலீடு செய்தால், அதிலிருந்து கிடைக்கும் வட்டியில் 120 ஆண்டுகளுக்கு வேலையே பார்க்காமல் சம்பளம் கொடுக்க முடியும் என்கின்றனர் இவர்கள்.

வளம் பெருகுவது தொழிலாளர்களின் ஊதிய உயர்வின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று கூறியபிரெஞ்ச் பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டின் கோட்பாட்டை ஓவிய இரட்டையர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

பெரும் பணக்காரர்களுக்கும் சாதாரண மக்களுக்குமான இடைவெளி அதிக அளவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே தாமஸ் பிக்கெட்டியின் முக்கிய குறிக்கோள் என்கின்றனர் இந்த ஓவியர்கள்.

வேலையே பார்க்காமல் பணியாற்றப் போகும் தொழிலாளருக்கு மாதந்தோறும் 2,320 அமெரிக்க டாலர் சம்பளம். ஆண்டுதோறும் சம்பள உயர்வு, கோடை விடுமுறை, ஓய்வு பெற்றபின் பென்ஷன் எல்லாம் உண்டு.
இந்த திட்டத்துக்காக விண்ணப்பிக்க 2025-ம் ஆண்டு கடைசியாகும். தேர்வு செய்யப்படுவோரின் வேலை இதுதான்.
தினமும் காலை ரயில் நிலையத்துக்கு செல்லவேண்டும். வருகைப் பதிவேட்டில் பஞ்ச் செய்ய வேண்டும். பிளாட்பாரத்தில் விளக்கு எரியும்.
வேலையே செய்யாத நபர்கள் பணியில் இருக்கிறார்கள் என்பதை பயணிகள் புரிந்துகொள்வார்கள்.

பணி முடிந்ததும் கார்டை பஞ்ச் செய்துவிட்டு வெளியேறினால், பிளாட்பாரத்தில் எரிந்த விளக்கு அணைந்துவிடும்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் வேறு இடத்தில்கூட வேலை செய்து சம்பாதிக்கலாம். பணியிலிருந்து விலகினாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ மட்டுமே வேறு ஒருவர் அந்த வேலையே செய்யாத பணிக்கு நியமிக்கப்படுவார்.

மற்றபடி, வாழ்நாள் முழுவதும் இந்த பணிக்கு உத்தரவாதம் உண்டு. இந்த பணிக்கு கல்வித் தகுதி ஏதும் இல்லை. உலகம் முழுவதிலும் இருந்து யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

எனினும், ஓவியர்களின் இந்த அறிவிப்புக்கு ஸ்வீடனில் அரசியல் ரீதியாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசு பணத்தை இப்படியா வீணடிப்பது என்ற கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

 

 

More articles

Latest article