நியூயார்க்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தோல்வி அடைந்துள்ள விவரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவரங்களை உலக சுகாதார அமைப்பு, தமது இணையதளத்தில் மிக தெளிவாக வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் நிறுவனம் அந்த பதிவை அழித்துவிட்டு, மருந்துக்கான சாத்தியக்கூறுகளை பற்றி ஆராய்ந்து வருகிறது.

இந்த ரெம்டிசிவிர் மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் எப்படி நோயாளிகளுக்கு கொடுத்தார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. 237 நோயாளிகளுக்கு கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது,

அந்த மருந்து 158 பேருக்கு சரியாக வேலை செய்யவில்லை. 79 பேர் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு, மருந்து உட்கொண்ட நோயாளிகளில் 13.9% பேர் இறந்துவிட்டனர்.

பக்க விளைவுகள் அதிகம் இருந்த காரணத்தால் 19 நோயாளிகளுக்கு இந்த சோதனை ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டது. சோதனை குறித்து ஆய்வறிக்கை மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது, ஆரம்பத்தில் தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறி இருக்கிறது.