டெல்லி: நடப்பு ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டக்கூடும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
தொற்றுநோய் காரணமாக 2 மாத இடைவெளியைத் தொடர்ந்து மே 25 அன்று சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. இது குறித்து பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மே 25 அன்று, நாங்கள் மீண்டும் சிவில் விமானப் பணிகளைத் தொடங்கினோம் என்றார்.
அந்த நேரத்தில், 30,000 பயணிகள் இருந்தனர். நேற்றைய தரவுகள்படி 1.76 லட்சம் பயணிகள் இருந்தனர். தீபாவளி மற்றும் இந்த ஆண்டு இறுதிக்கு இடையிலான காலகட்டத்தில் நாங்கள் கிட்டத்தட்ட கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைய போகிறோம் என்று கூறினார்.
சண்டிகர் நகரில் இருந்து மேலும் விமானங்களை எவ்வாறு அறிமுகப்படுத்தலாம் என்பது குறித்து விவாதிக்க விமான நிறுவனங்கள், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் பிற பங்குதாரர்களின் கூட்டம் கூட்டப்படும் என்றார்.