கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைவார் என்று டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

7ம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் நேற்று மாலை முடிவடைந்த சில நிமிடங்களில் 2024 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியானது.

பாஜக கூட்டணி 330 இடங்களுக்கும் மேல் வெல்லும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஒரே மாதிரியான முடிவை வெளியிட்டுள்ளது.

வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறியவர்களில் வெகுசிலரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற ஒற்றை கேள்வி மூலம் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு தேர்தல் பிரச்சார நேரத்தில் களத்தில் இருந்து ஒதுங்கிய சங்பரிவார் மற்றும் பாஜக-வினரை வாக்கு எண்ணும் மையங்களுக்கு படையெடுக்க வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

அதேவேளையில் மாநில வாரியாக வெளியாகி வரும் தரவுகளில் பாஜக கணிசமான இடங்களை இழக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படுதோல்வி அடைவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

https://x.com/TimesNow/status/1797173600971092265

இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ் குமார் வெற்றிபெறுவார் என்று ஒரு கருத்துக்கணிப்பும் மற்றொரு கருத்துக்கணிப்பில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சிங்கை ராமச்சந்திரன் வெற்றிபெறுவார் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால் அண்ணாமலை படுதோல்வி அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக-வுக்கு சாதகமான நிலையில் இந்தியா கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று அக்னி நியூஸ் கணிப்பு…