சிகாகோ:  தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக்காக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ நகரில் உள்ள அமெரிக்க நிறுவனமான  டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடிக்கு ஒப்பந்தம்  போட்டுள்ளார்.

அத்துடன் காலணி உற்பத்தி நிறுவனம், சென்னையில் வடிமைப்பு யூனிட் அமைக்கவும், ஆப்டம்  நிறுவனத்தின் விரிவாக்கம் தொடர்பாகவும் அந்நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே சிகாகோ நகரில் அஷ்யூரன்ட், ஈட்டன் நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து, ஈட்டன் நிறுவனம் தமிழ்நாட்டில் 200 கோடிக்கு முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், சென்னையில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் ஏ.ஐ. ஆய்வகம் அமைப்பதற்காக பிரபல நிறுவனமான கூகுளிடமும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தற்போது  அமெரிக்காவின் , டிரில்லியன்ட் நிறுவனத்துடன் 2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,  ஏற்கனவே சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று ஏராளமான தொழில் நிறுவனங்களுடன்   புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், பேபால், நோக்கியா, மற்றும் மைக்ரோசிப் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.900 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், ரூபாய் 400 கோடிக்கு 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடனும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

இந்த நிலையில், தற்போது, சிகாகோவில் டிரில்லியன்ட் நிறுவனத்துடன் 2,000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சிகாகோவில் அற்புதமான முன்னேற்றங்கள்!

டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ₹2000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அலகு மற்றும் அதன் வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழ்நாட்டில் நிறுவியது. இந்த மதிப்புமிக்க கூட்டாண்மைக்கு ட்ரில்லியன்ட்டுக்கு நன்றி!

Nike உடன் அதன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது மற்றும் சென்னையில் ஒரு தயாரிப்பு உருவாக்கம்/வடிவமைப்பு மையத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுக்களை நடத்தியது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் 5,000 பேர் வேலை செய்து வரும் Optum உடன் ஈடுபட்டுள்ளது மற்றும் சுகாதாரத் துறைக்கான திறமைக் குழாய்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. திருச்சி மற்றும் மதுரையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

வேகம் வலிமையானது! என தெரிவித்துள்ளார்.

Nike உடன் அதன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது மற்றும் சென்னையில் ஒரு தயாரிப்பு, உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு மையம் நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆப்டம் (Optum) நிறுவனத்தில் 5,000 பேர் வேலை செய்து வரும் நிலையில், திருச்சி மற்றும் மதுரையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.