மராவதி

ந்திர மாநில தலைநகர் அமைக்க உதவி திட்டத்தை ரத்து செய்த உலக வங்கி மற்ற திட்டங்களுக்கான உதவி தொடரும் என அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்த போது ஐதராபாத் மாநிலம் தெலுங்கானாவின் தலைநகர் ஆனது.   அப்போது இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக ஐதராபாத் 10 வருடங்களுக்கு தொடரும் எனவும் அதற்குள் ஆந்திரா தனது தலைநகரை அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.  அதையொட்டி ஆந்திராவின் அப்போதைய முதல்வர் சந்திரபாபு  நாயுடு அமராவதியைத் தலைநகராக அமைக்கப் போவதாக அறிவித்தார்.

இந்த நகரக் கட்டமைப்புக்கு உலகவக்கியிடம் இருந்து ரூ.2000 கடன் உதவி கோரி மத்திய அரசு மூலம் விண்ணப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் மத்திய அரசு தனது  கடன் விண்ணப்பத்தைத் திரும்பப்  பெற்றுக் கொண்டதால் உலக வங்கி கடன் உதவியை ரத்து செய்துள்ளதாக அறிவித்தது.   இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் உலக வங்கி, “ஆந்திர தலைநகர் கட்டமைப்புக்கான கடன் உதவியை மட்டுமே உலக வங்கி ரத்து செய்துள்ளது.  ஆனால் வேறு திட்டங்களுக்கான ரூ.7000 கோடி கடன் உதவி தொடர்ந்து வருகிறது.   இம்மாநிலத்தின் சுகாதாரம், விவசாயம், மின்சக்தி, மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய திட்டங்களுக்கான அனைத்து உதவிகளும் ரத்து செய்யப்படவில்லை.

இதில் கடந்த மாதம் கையெழுத்தான மாநிலத்தின் சுகாதாரத்துறை திட்டங்களுக்கான ரூ.250 கோடி உதவியும் உள்ளடங்கும்.  ஆந்திர மாநிலத்தின் பல திட்டங்களில் உலக வங்கி பங்கு  பெற்று வருகிறது.   ஆந்திர மாநிலத்தின் பெண்கள் சுய உதவி திட்டத்தின் மூலம் பல நாடுகள் இது பற்றித் தெரிந்துக் கொண்டுள்ளன. எனவே இந்த மாநிலத்தின் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கு கொள்வதில் உலக வங்கி பெருமை அடைகிறது” என அறிவித்துள்ளது.