டையாளூர்

கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறை அதிகார்கள் தங்கள் ஆய்வை தொடங்கி உள்ளனர்.

 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜ சோழன் ஆவார். இவர் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் ஆவார். இவருடைய ஆட்சிக் காலத்தில் இலங்கை உள்ளிட்ட தெற்கு பகுதிகள் அனைத்தும் சோழ அரசின் நிர்வாகத்தில் இருந்தன. இவருடைய சமாதி கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைஒட்டி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர், “ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உலக அளவில் பாராட்டு பெற்று வருகின்றன. ஆனால் அவரை அடக்கம் செய்த சமாதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூர் என்னும் கிராமத்தில் கவனிப்பாரின்று உள்ளது.

ராஜராஜ சோழனின் சமாதி அமைந்துள்ள இடத்தில் அவருக்கு ஒரு மணிமண்டபம் அமைத்து அவருடைய சிலை திறக்க வேண்டும்.    இதற்காக நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை அளித்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தது

இந்த மனுவை விசாரித்த அமர்வு மனுதாரர் குறிப்பிட்டுள்ள உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதி இருந்ததற்கான வரலாற்று சான்று இல்லை எனவும் அதை உறுதிப்படுத்த தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

அதை ஒட்டி தொல்லியல் துறையினர் உடையாளூரில் ஆய்வு நடத்த தொடங்கி உள்ளன்ர்.