டில்லி:

நாடு முழுவதும் நடைபெற்றும் வங்கி தேர்வுகளை இனிமேல், தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்களவையில் தெரிவித்தார்.

இன்று மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஆர்ஆர்பி உள்பட வங்கித் தேர்வுகளை இனிமேல் மாநில மொழிகளில் எழுதலாம் என்று கூறினார்.

மேலும, இந்தி  மற்றும் ஆங்கிலமுடன், மாநில மொழிகளிலும் தேர்வு எழுத முடியும் என்றும், அதன்படி,  அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, மற்றும் உருது ஆகிய மொழிகளில் இனிமேல் வங்கித் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.

நிர்மலா சீத்தாராமனின் இந்த அறிவிப்புக்கு உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.