ரசியலில் இன்றைக்கு காசு பணம் உள்ளவர் தான் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற ‘ விதி’ வகுக்கப் பட்டு விட்டது!

ஆனால், நேர்மை… தூய்மைக்கும் அரசியலில் இன்னும் மரியாதை இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் மதுரை கிழக்குத் தொகுதியில் பத்து ஆண்டுகள் எம். எல். ஏ வாக இருந்த தோழர் நன்மாறன் அவர்கள்!

கடைசி வரை வாடகை வீடு… பஸ்சில் பயணம் என்று வாழ்ந்திருக்கிறார்!

மதுரை மக்களும் அவர் மீது மாறாத அன்பு வைத்திருந்தார்கள்!
இன்று அவர் மறைந்து விட்டார்!

ஆனால்… அவருக்கு நேரடியாக அஞ்சலி செலுத்திட,முதல்வர் முதல்.. சாதாரணக் குடிமகன் வரை திரண்டனர்… தோழர் நன்மாறனின் ‘கறைபடியாத’ அரசியலுக்குக் கிடைத்த மரியாதை அது….


இன்றைய சூழலில் பெரிய அரசியல் கட்சிகள் கூட, தங்களுக்கு என்று ‘தேர்தல் வியூக வகுப்பாளர்களை’ நியமித்துக் கொள்கின்றன!

இவர்கள் முழுக்க முழுக்க’வியாபாரிகள்! இந்தத் தேர்தலில் ஒரு கட்சிக்கும், அடுத்த தேர்தலில் அதன் எதிர்க்கட்சிகளும் ‘ வியூகம்’ வகுப்பார்கள்!

எல்லாம் ‘துட்டு’ தான்! கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கூட, பிரசாந்த் கிஷோர் என்கிற ‘வியூக வகுப்பாளரை’ காங்கிரசில் சேர்த்தால் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.. அது பற்றிய செய்திகளும் வந்தன!

இடையில் என்ன நடந்ததோ, தற்போது, ” இன்னும் பத்து வருடத்துக்கு பி. ஜே. பி. யை சமாளிக்க வேண்டும்” என்று கிஷோர் ‘முழங்கி’ இருக்கிறார்!

இதனால், இந்த வியாபாரியின் நோக்கத்தைப் பற்றி மக்கள் சந்தேகிக்கிறார்கள்…!