கொழும்பு:

லங்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எழுவருக்கு  தலா 56 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வில்பத்து தேசிய சரணாலயத்தில் கெப் வாகனமொன்றை இலக்கு வைத்து 2006ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி  கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில்ஏழு பேர் பலியானார்கள்.

இது குறித்த வழக்கு அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குண்டு தாக்குதல் நடத்தியதாக, விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எழுவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மன்னார், சாவகச்சேரி, வவுனியா, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இந்த எழுவர் மீது 8 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரினால் இவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எழுவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இந்த நிலையில் எழுவருக்கும் பேருக்கு தலா 56 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.