டில்லி
முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், அமெரிக்க அரசு ”இந்திய நிர்வாகத்தின் கீழ் இருந்த ஜம்மு காஷ்மீர்” எனக் குறிப்பிட்டுள்ளத ஒப்புக்கொள்கிறதா என மோடி அரசை கேட்டுள்ளார்.
சமீபத்தில் அரசு குறிப்பு ஒன்றில் அமெரிக்கா ஒரு தீவிரவாத தாக்குதலைப் பற்றிக் கூறுகையில் “இந்திய நிர்வாகத்தின் கீழ் இருந்த ஜம்மு காஷ்மீரில் இந்த தாக்குதல் நடை பெற்றது” எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் மோடி – ட்ரம்ப் சந்திப்பு நிகழ்ந்தது
இது குறித்து முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மோடி அரசின் பார்வையில் இந்த அறிக்கை என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டது எனவும் அதை இந்த அரசு அப்படியே ஏற்றுக் கொள்கிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.