
கன்னியாகுமரி:
முன்னாள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவும், இந்நாள் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியுமான ஜான் ஜேக்கப் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜான் ஜேக்கப் தற்கொலை செய்துகொண்டார். இவர் தற்போது காங்கிரசில் இருந்து விலகி, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ்மாநிலகாங்கிரசில் பணியாற்றி வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட ஜான் ஜேக்கப் அவரது உறவினரால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் மரணமடைந்தார்.
Patrikai.com official YouTube Channel