டெல்லி

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு அரசு அளித்த இல்ல்லத்தை காஇ செய்துள்ளார்.

உச்சநீதிமன்றம் டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் கடந்த மாதம் 13 ஆம் தேதி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். கெஜ்ரிவால் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி பொறுப்பேற்றுக் கொண்டார். எனவே அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக இருந்தபோது அவருக்கு அரசு ஒதுக்கிய இல்லத்தை காலி செய்யும் நிலை ஏற்பட்டது.  இன்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிகார்ப்பூர்வ இல்லத்தில் இருந்து தனது குடும்பத்தினருடன் இன்று வெளியேறினார்.

தற்போது அவர் ரவிசங்கர் சுக்லா லேனில் உள்ள ஆம் ஆத்மி தலைமையகத்திற்கு அருகில் உள்ள மண்டி ஹவுஸ் அருகே பெரோஸ்ஷா சாலையில் உள்ள பஞ்சாப் மாநிலங்களவை எம்பி அசோக் மிட்டலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.

[youtube-feed feed=1]