டில்லி

தெலுங்கானா முன்னால் முதல்வர் சந்திரசேகர் மகள் கவிதா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

கவிதாடம் 10 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடந்தது. தற்போது  விசாரணை முடிந்தால் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையொட்டி கவிதா டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு சிறையில் நேற்று முன் தினம் இரவை கழித்தார்.

சிறை அதிகாரிகள்,

“கவிதா, பெண்களுக்கான 6-ம் எண் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சுமார் 100 பெண் கைதிகள் உள்ளனர். வேறு 2 பெண் கைதிகள் உள்ள அறையை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன் நேராக அறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். முதலில் அவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்தது. சற்று நேரத்தில் சீரானது. 

கவிதாவுக்கு வீட்டு உணவு, மெத்தை, செருப்பு, ஆடைகள், படுக்கை விரிப்பு, புத்தகங்கள், பேனா, செய்தித்தாள், மருந்துகள் ஆகியவை அளிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, அவருக்கு மெத்தை, செருப்பு, ஆடைகள், படுக்கை விரிப்பு, மருந்துகள் ஆகியவை அளிக்கப்பட்டன. சிறை உணவையே அவர் சாப்பிட்டார். இரவில், பருப்பும், சாதமும் சாப்பிட்டார். 

நகைகள் அணிய நீதிமன்றம் அனுமதி அளித்தபோதிலும், கவிதா நகைகள் அணியவில்லை. அவர் விசேஷமாக எதுவும் கேட்கவில்லை. சிறை விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கேற்ப அனைத்தும் வழங்கப்படும். புதன்கிழமை  காலையில், கவிதாவுக்குத் தேநீரும், தின்பண்டங்களும் அளிக்கப்பட்டன. சிறை நூலகத்தில் புத்தகங்கள் எடுத்துப் படிக்க அவருக்கு அனுமதி உண்டு” 

என்று தெரிவித்துள்ளனர்.