ண்டிகர்

ரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா  சிறையில் இருந்தபடியே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி  53.4%  மதிப்பெண் தேர்ச்சி பெற்றுள்ளார்,

ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில் அரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.  தற்போது அவர் திகார் சிறையில் இருக்கிறார்.

சிறையில் இருந்தபடி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓப்பன் ஸ்கூலிங்க் என்னும் தேர்வு அமைப்பின் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

அதன் முடிவு தற்போது வெளியிடப் பட்டுள்ளது.  அதில் சவுதாலா 53.4% மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தேர்வில் கலந்துக் கொண்ட மாணவர்களிலேயே அதிகம் வயதானவர் சவுதாலா தான் என்றும் அந்த இன்ஸ்டிட்யூட் தலைவர் ஷர்மா தெரிவுத்துள்ளார்.

அவர் மொத்தம் உள்ள 500 மதிப்பெண்களில் 267 பெற்றுள்ளார். தற்போது அவருக்கு 82 வயது என்பது குறிப்பிடத்தக்கது.