டெல்லி: 

ச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை எம்பி ஆக குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் 46வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரஞ்சன் கோகாய், 2018ஆம் ஆண்டு அக்டோடபர் 3ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி வரை பணியில் இருந்தார். இவர் தலைமை நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் அயோத்தி ராமர் கோயில் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநிலங்களை எம்.பி-யாக இதற்கு முன்னும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து கடந்த 1991 ஓய்வு பெற்ற ரங்கநாதன் மிஸ்ரா என்பவர், 1998-2004ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு வழங்கப்பட்டுள்ள மாநிலங்களவை பதவியை வேண்டாம் என சொல்லுவார் என எதிர்பார்கிறேன். ஒருவேளை அவர் அப்படி செய்யவில்லை என்றால், அது நீதித்துறைக்கு அளவிட முடியாத சேதத்தை அவர் ஏற்படுத்தியதாக அமைந்துவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.

நவம்பர் 17, 2019 அன்று ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகோய், இந்தியாவின் 46 வது தலைமை நீதிபதியாக 2018 அக்டோபர் 3 முதல் – 2019 நவம்பர் 17 வரை பணியாற்றினார்.

ரஞ்சன் கோகோய் தனது ஆட்சிக் காலத்தில் பல வரலாற்று தீர்ப்புகளை வழங்கினார். இதில் அயோத்தி ராம் ஜன்மபூமி பாப்ரி மஸ்ஜித் வழக்கு, சபரிமலை கோயிலுக்கு பெண்கள் அனுமதி மற்றும் ரஃபேல் ஒப்பந்த சர்ச்சை மற்றும் அசாம் என்.ஆர்.சி சர்ச்சை போன்றவை அடங்கும்.

45 வது சி.ஜே.ஐ தீபக் மிஸ்ராவிற்குப் பிறகு ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். தற்போதைய இந்திய தலைமை நீதிபதியான சரத் அரவிந்த் போப்டே 2019 நவம்பர் 17 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

[youtube-feed feed=1]