
இந்தி, போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர்,
தனது முன்னாள் காதலர் ஆள் வைத்து ஆசிட் வீச முயன்றதாக பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் ஒருவனை காதலித்தேன். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவனை பிரிய முடிவு செய்தேன். இதனால் எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்தான். என்னை சினிமா துறையில் இருந்து வெளியேற்றவும் சதி செய்தான்.
ஒரு கட்டத்தில் எனது முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்வதற்காக சிலரை அனுப்பி வைத்தான். அவர்களிடம் இருந்து நான் அதிர்ஷ்டவசமாக தப்பினேன். எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது” என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]