டெல்லி
நேற்று மாலை முன்னாள் பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மரணம் அடைந்தார்.
நேற்று மாலை முன்னாள் பீகார் துணை முதல்வரும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலமானார். சுமார் 72 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 1952 ஆம் ஆண்டு பிறந்த சுஷில் குமார் மோடி, முப்பது வருடங்களாக அரசியல் களத்தில் உள்ளார். இவர் கடந்த 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பீகார் துணை முதல்வராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகித்தார். மேலும் எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.
\கடந்த ஏப்ரல் மாதம் சுஷில் குமார் மோடிக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதையொட்டி தாம் 2024 மக்களவை தேர்தலில் இருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷில் குமார் மோடி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இன்று அவரது இறுதிச் சடங்குகள் இன்று பாட்னாவின் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.