சேலம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் திமுக அணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. அதிமுக அணி தோல்வி அடைந்து ஆட்சியைப் பறி கொடுத்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இல்லம் சேலம் நெடுஞ்சாலை நகரில் அமைந்துள்ளது. இங்கு தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மதுரை, திருப்பரங்குன்றம் ராஜன் செல்லப்பா, தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி கருப்பண்ணன், கே.பி. அன்பழகன், முனுசாமி, சேவூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]