டெல்லி: இவிஎம்-கள் கருப்புபெட்டி போன்றது, தேர்தல் பணியில் வெளிப்படைத் தன்மை இல்லை என காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இந்த நிலையில்,   “இந்தியாவில் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு “கருப்புப் பெட்டி”, அவற்றை யாரும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. எங்கள் தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை குறித்து தீவிர கவலைகள் எழுப்பப்படுகின்றன” என ராகுல் காந்தி விமர்சித்து  உள்ளார்.

பிரபல தொழில்நுட்ப பில்லியனர் எலான் மஸ்க், ‘இவிஎம் மட்டுமல்ல எதையும் ஹேக் செய்ய முடியும் என்றும்,   “சிறியதாக இருக்கும்போது, ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து இன்னும் அதிகமாக உள்ளது” என்றும், ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒழிக்க வேண்டும்  கூறியதை அடுத்து ஈ.வி.எம்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.  இவிஎம்  உள்பட எதையும் ஹேக் செய்யலாம்’ என  எலான் மஸ்க் கூறியதைத் தொடர்ந்து, இவிஎம் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது.

இதையடுத்து,  காங்கிரஸ் எம்.பி.  ராகுல் காந்தி, இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை “கருப்பு பெட்டி” என்று வர்ணித்ததோடு, மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியின் முடிவு குறித்து சலசலப்பை ஏற்படுத்திய ஒரு செய்தி அறிக்கையை மேற்கோள் காட்டினார்.

முன்னதாக, நடைபெற்று முடிட்நத லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்திருந்தது. ஏராளமான வழக்குகள் இது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தற்போது மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைக்கான தேர்தலில்,  மும்பை வடமேற்கு தொகுதியின் லோக்சபா தேர்தல் முடிவு தொடர்பாக இவிஎம் இயந்திரம் மீது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக கூட்டணியின் ஷிண்டே பிரிவை சேர்ந்த வேட்பாளர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டு அதன் மூலமாகவே வெற்றி கிடைத்திருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில்,  உலகின் மிகப்பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். ஏனெனில் மனிதர்கள் அல்லது AI மூலம் அவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து உள்ளது” என்று x தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவாதங்களை மேலும்  சூடுபிடிக்க வைத்தது. இந்த பதிவை மேற்கோள்காட்டி, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆராய்வதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும்போது ஜனநாயகம் சீர்குலைந்துவிடும்” என்று ராகுல் காந்தியும் x தளத்தில் பதிவிட்டிருந்தார்.  இப்படியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் முன்னாள் மத்திய அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர், எலான் மஸ்க்கின் x தள பதிவை மேற்கோள் காட்டி, “இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை, வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை” என்று கூறியிருந்தார்.  இதற்கும் தற்போது எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். அதாவது, “எதையும் ஹேக் செய்யலாம்” என்று அவர் கூறியுள்ளார். தற்போது இந்த x தள பதிவுகள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குப்பதிவு முறைகேடுகள் தொடர்பாக சுயேச்சை அதிபர் வேட்பாளரான ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் தனது எக்ஸ் பக்கத்தில், “போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற முதன்மைத் தேர்தலில் இவிஎம் இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அதிர்ஷ்டவசமாக, ஆவணங்கள் இருந்ததால், வாக்கு எண்ணிக்கை சரி செய்யப்பட்டது. ஆவணங்கள் இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் என்ன நடக்கும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். நான் எதிர்க்கட்சியா.. நான் கேட்கிறேன்யா.. அந்த கொடநாடு கேஸ் என்னாச்சு? சசிகலா திடீர் ஆவேசம் இந்த கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் மனிதர்கள் அல்லது ஏஐ மூலமாக ஹேக் செய்யும் ஆபத்து உள்ளது என்ற ரீதியில் பதிவிட்டு இருந்தார். எலான் மஸ்க்கின் இந்த பதிவு இந்தியாவில் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கருப்பு பெட்டி எனக் கூறி சாடியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்த