சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சென்னை உள்டப பல இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. இதன் காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது.
பழுதான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுன் முடிவடைகிறது. மக்கள் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்த தால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. சில வாக்குச்சாவடிகளில் மணிக்கணக்கில் தாமதம் ஆனதால், வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் திரும்பிச் சென்றனர்.
தமிழகம் முழுவதும் மொத்தம் பழுது காரணமாக 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 692 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் (விவிபேட்) மாற்றப்பட்டு இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், பழுதான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் தாமோதரன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.