புதுடெல்லி: இந்தியாவில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மோசடி செய்யத்தக்கவை என்று அமெரிக்க கணிப்பொறி வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கடந்த பல்லாண்டுகளாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து, கடந்த சில தேர்தல்களாக எதிர்க்கட்சிகள் மற்றும் வேறுபல தரப்பினர்களாலும் தொடர்ச்சியாக புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தேர்தல் கமிஷன் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தொடர்ச்சியான உத்தரவாதங்கள் தரப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரங்கள் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனங்களால் கடுமையான கண்காணிப்பின் கீழ் தயாரிக்கப்பட்டவை என்றும், இவை தனித்த ஒரு அமைப்பு என்பதால், வெளியிலிருந்து இதை இணையம் மூலம் யாரும் இயக்க முடியாது என்றும் தேர்தல் கமிஷன் தொடர்ந்து கூறிவருகிறது.

ஆனால், இந்த இயந்திரத்தில் மோசடி செய்வது சாத்தியமானதுதான் என்று அமெரிக்க கணிப்பொறி வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தேர்தலில்கூட, விவிபாட் இயந்திரத்தின் சீட்டுகளை, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்ற கோரிக்கை கிட்டத்த அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

[youtube-feed feed=1]