சென்னை:   காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்நாள் எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவின் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது. அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் சாா்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது முதிர்வு காரணாக, அவரது உடல்நிலையில் மேலுசில பிரச்சினைகள் கண்டறியப்பட்டதால், அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில்,  அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதனால், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.