சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கடந்த 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2
முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 11 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:- தமிழ்நாடு அரசு ஆண்டுகளுக்கு கொடுத்த உறுதிமொழியை 2 ஆண்டுகளில் ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றியுள்ளது. மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாங்கள் ஒரு கொள்கை சார்ந்த அரசியல் இயக்கமாக இருக்கிறோம். எங்களை எதிர்த்து நிற்கும் அதிமுக சஞ்சலத்தில் உள்ளது. அவர்களால் அவர்களுடைய அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை. எனவே சஞ்சலத்தில் உள்ள தன்னம்பிக்கை இல்லாத கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.