தமிழக மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை

Must read

சென்னை

னைத்துப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.   இடையில் ஒரு சில பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக மீண்டும் மூடப்பட்டன.   தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது கொரோனா வெகுவாக குறைந்துள்ளது.

அவ்வகையில் தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துள்ளது.   கடைகள், மால்கள், திரையரங்குள் உள்ளிட்டவை கட்டுப்பாட்டுடன் திறக்கப்பட்டுள்ளது.  அவ்வகையில் இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் கல்லூரியும் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளியும் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.    தற்போது அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் படி கட்டாயம் அனைத்துப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஆர்டி – பிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

More articles

Latest article