ஜெய்ப்பூர்,
நாட்டில் 41 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி வீதம் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் எடாவா நகரில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் பேசியதாவது,
மத்திய, மாநில அரசுகளின் தவறான விவசாயக் கொள்கையால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்
நாட்டில் தற்போது 41 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி வீதம் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது
விவசாய ஆதிக்கம் நிறைந்த நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது துரதிருஷ்டவசமானது.
விவசாயத் துறை நலிந்து வருவதால், அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டப்படு கிறார்கள்
அரசுக்கு எதிராக குரலெழுப்பும் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்படும் அவலம் நாட்டில் நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் 5 விவசாயிகள் அரசின் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது வேதனையானது.
நாட்டில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி; என்று மத்திய அரசு தனது ஆட்சி குறித்து பெருமை பேசி வருகிறாது. ஆனால், மோடி தலைமையிலான ஆட்சியில் விவசாயிகளுக்கோ, விவசாய வளர்ச்சிக்கோ பெரிதாக எதையும் செய்யவில்லை.
விவசாயிகளை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே மத்திய பாஜக அரசு பார்க்கிறது.
இவ்வாறு சச்சின் பைலட் பேசினார்.