மாலை செய்திகள்!

Must read

 • தமிழக பெண் எம்.பி சசிகலாபுஷ்பா, மற்றும் அவரது கணவர்  லிங்கேஸ்வரன் நேரில் ஆஜர். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறை எண் 12ல் விசாரணை. நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.

sasi-mdu1

 •  
  கொலம்பியாவின் பெரும் கிளர்ச்சிக் குழுவான ஃபார்க், ஆயுதப் போராட்டத்தை நிறுத்தியிருக்கிறது. இதன் மூலம், உலகின் மிக நீண்ட மற்றும் மோசமான பிரிவினைவாதப் போராட்டம் முடிவுக்கு வரும் நிலையை எட்டியிருக்கிறது.
 • மைசூரில் வரும் செப்டம்பர் மாதம் ஒயின் திருவிழா நடத்த கர்நாடகா மாநில ஒயின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
 •  ரஜினியிடம் பஞ்சாயத்துக்கு சென்ற அமலா பால், தனுஷ் விவகாரம்?-நடிகை அமலா பால், இயக்குனர் விஜய் தம்பதியினர் விவாகரத்துக்கு சென்றுள்ள நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் வட சென்னை படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட கூடாது என தனுஷின் மனைவி கூறியும், அதை மதிக்காமல் அவர் வாய்ப்பு வழங்கியதால், இந்த பஞ்சாயத்து ரஜினியிடம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 •  தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் தாது மணல் எடுத்து வரும் வைகுண்டராஜன் தாது மணல் கடத்தியதாகவும், இதனால் அரசுக்கு 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது சகோதரர் குமரேசன் கூறியுள்ளார்.
 • குழந்தை பெற்ற 5-ஆம் வகுப்பு பள்ளி மாணவி: மாமா தான் காரணம் என சந்தேகம்!-கர்நாடகாவில் உண்டு உறைவிட பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்தது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 • ஒரு ரூபாய்க்காக தர்ம அடி! கர்நாடக மாநிலம் துமகூருவில் இருந்து பெங்களூரு நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிக்கு நடத்துனர் ஒரு ரூபாய் சில்லரை கொடுக்கவில்லை. இதனால் அந்த பயணி நடத்துனரை  ஆபாச வார்த்தைகளால் திட்டி கொண்டே வந்துள்ளார். இதை கேட்டு சக பயணிகள் எரிச்சல் அடைந்தனர். மேலும், அந்த பயணியை தகாத வார்த்தைகளால் சிலர் திட்டினர்.
 • இனப்பெருக்க பண்ணையில் இருந்து தப்பிய 180 நாகப்பாம்புகள்: பீதியில் பொதுமக்கள்-சீனாவின் தென்மேற்கு சிசுவன் மாகாணத்தில் இனப்பெருக்க பண்ணையில் இருந்து 180 நாகப்பாம்புகள் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
 • பிரபல கிராமிய பாடகர் திருவுடையான் கார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- திருவுடையான், சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடிவிட்டு காரில் திரும்பும் போது வாடிப்பட்டி அருகே, முன்னே சென்ற லாரியின் மீது மோதி சம்பவ இடத்திலேயே திருவுடையான் மரணமடைந்தார்.அவரோடு பயணித்த அவரின் தம்பியும், ஓட்டுநரும் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். டிரைவர் உறங்கிவிட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 • காவல் நிலையத்தில் விசாரணை கைதி ஒருவர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஏனாதி கரம்பைப் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு என்ற வெங்கடாசலம். இவரது மகன் ரவிகாந்த் (36). இவரை ஒருவழக்கு தொடர்பாக பேராவூரணி காவல்துறையினர் பட்டுக்கோட்டைக்கு சனிக்கிழமை அழைத்து வந்துள்ளனர்.அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் பட்டுக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் ரவிகாந்த் ஞாயிறு காலை காவல் நிலையத்தின் விசாரணை அறையில் இறந்து கிடந்துள்ளார்.
 • மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்ற மருமகனுக்கு கத்தி குத்து!-இலங்கையில் மருமகனுடன் வசித்து வந்த மாமியாரை குடிபோதையில் வந்த மருமகன் பலாத்காரம் செய்ய முயன்றதால், அவரை மாமியார் கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது.
 • நடிகர் சங்கத்தின் மீது கூறப்பட்ட ஊழல் புகாருக்கு நடிகரும், சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் விளக்கம் அளித்துள்ளார். “நடிகர் சங்கத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை. முந்தைய சங்க உறுப்பினர்கள் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தன. அதுபோல் ஆதாரத்தை வைத்துக் கொண்டு பேச வேண்டும். அதைவிட்டு விட்டு, தேவையில்லாமல் சிலர் பொய்யான தகவல்களை கூறிவருகின்றனர். வாராகி என்பவர் எந்த படத்தில் நடித்தவர் என்று கூட எனக்கு தெரியவில்லை. நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட கணக்குகள் அலுவலகத்தில் இருக்கிறது. அதை எந்த நடிகர் வேண்டுமானும் வந்து பார்க்கலாம். நேரில் வந்து பேசினால் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும். இன்னும் 10 நாட்களில் நடிகர் சங்கம் சார்பில் பல தகவல்களை வெளியிட இருக்கிறோம்” என்று அவர் விளக்கம் அளித்தார்.
 • கள்ளக் காதலை கண்டித்ததால் பக்கத்து வீட்டுக்காரர் குழந்தையைக் கொன்ற ஜோடி
 • கடந்த 23-ஆம் தேதி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள சித்தேரியைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரது 4 வயது மகன் நீத்தீஷ் வீட்டின் கழிவறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தான்.
 • விங்சூட்டில் குதிப்பதை நேரடி ஓளிபரப்பு செய்தவர் மரணம் : அதிர்ச்சி வீடியோ மலையில் இருந்து விங்சூட்டில் குதிப்பதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய முயன்றவர், குதிக்கும் போது மரணம் அடைந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்து பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இறப்பதற்கு முன் அவர் பேசிய மற்றும் கீழே குதிக்கும் அந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
 • எஸ்.பி.ஐ-யில் ஏ.டி.எம். மிஷினில் தனிநபர் கடன் பெறும் திட்டம் அறிமுகம். இந்தியாவில் சிறந்த வங்கி சேவையை செய்து வரும் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம். மிஷினில் தனிநபர் கடன் பெறுவதற்கான வசதியை எஸ்.பி.ஐ புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • கடலூர் அருகே உள்ள கங்கனாங்குப்பம் என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்தை திருடியுள்ளார்.
 •  நடிகர் சங்கத்தின் முந்தைய நிர்வாகிகள் செய்த ஊழல் பற்றி ஆதாரம் கிடைத்துள்ளது என்றும் அவர்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகரும் நடிகர் சங்கத்தின் துணைத்தலைவருமான கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 • அட்லாண்டிக் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்
 • டெல்லி விமான நிலையத்தில் 80 கிலோ தங்கம் மாயம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை
 • 18 வயது வாலிபரை மணந்த 5 குழந்தைகளின் தாயார்-மலேசியாவின் பியூபோர்ட் பகுதியை சேர்ந்தவர் மொசுத்சுபி அலின்(18). இவர் அதே பகுதியை சேர்ந்த சோபியா குஸ்டி(42) என்ற பெண்ணை கடந்த செவ்வாய் கிழமை திருமணம் செய்துள்ளார்.
 • புதிய அரசியல் சாசன சட்டம்: பாராளுமன்றத்தில் நவம்பரில் தாக்கல் செய்ய இலங்கை அரசு முடிவு
 • குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் ரூ.3,229 கோடியில் மேம்படுத்தப்படும் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
 •  நகராட்சி-மாநகராட்சி தெருவிளக்குகள் இனி எல்இடி விளக்குகளாக மாற்றப்படும் -சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
 • நகராட்சி-பேரூராட்சி தலைவர் நேரடி தேர்வு ரத்து சட்டசபையில் மசோதா தாக்கல்
 •  கங்கை நதி தூய்மை திட்டத்தை பிரபல படுத்த 550 கி.மீ. நீந்தும் நீச்சல் வீராங்கனை-உத்தரபிரதேசத்தின் பிரபல நீச்சல் வீராங்கனை ஷரத்தா சுக்லா கங்கை நதி தூய்மை திட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ஒரு சாதனை நீச்சல் நிகழ்வினை நடத்த திட்டமிட்டுள்ளார்.
 • இதில் இவர் கான்பூர் முதல் வாரனாசி வரையிலான 550 கிலோ மீட்டர் தூரத்தை 70 மணி நேரத்தில் கடக்க திட்டமிட்டுள்ளார்.
 • ஹாக்கி வீரர் ரகுநாத் உள்பட 15 பேருக்கு அர்ஜுனா விருது
 • தீபா கர்மாகரின் பயிற்சியாளர் பிஜேஸ்வர் நந்தி உள்பட 6 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருது
 • பி.வி.சிந்து, தீபா கர்மாகர், சாக்ஷி மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது
 • கும்மிடிபூண்டி அருகே மதுக்கடையை மூடக்கோரி போரட்டம்
 • விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு
 • அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டை: ராணுவ வீரர் ஒருவர் காயம்
 • என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டப்படி 2ம் தேதி நடைபெறும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேகர் கூறியுள்ளார். புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் வெளியேறினார்.
 •  பச்சமுத்துவை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
 • வெள்ளத்தில் மூழ்கிய மகனை கையில் தூக்கி பிடித்து காப்பாற்றி உயிர் துறந்த தாய்-அமெரிக்காவில் கொலாரடாவில் லேக்வுட் பகுதியை சேர்ந்தவர் செல்சி ரூஸ்செல் (33), இவர் தனது 2 வயது மகன்   மற்றும் குடும்பத்தினருடன் உத்தா வில் உள்ள போவெல்  ஏரிக்கு சுற்றுலா சென்றார்.அங்கு சிறிய  அளவில் இல்லத்துடன் கூடிய படகு கள் விடப்பட்டுள்ளன. அதில்  ஒரு படகில் செல்சிரூஸ்செல் தனது மகனுடன்   சவாரி செய்தார். அப்போது  அவரது மகன்  திடீரென படகின் மேல் பகுதிக்கு சென்றான். திடீரென  எதிர்பாராத விதமாக ஏரி  தண்ணீருக்குள் விழுந்து விட்டான். மகனை காப்பாற்ற  தண்ணீருக்குள் பாய்ந்த தாய்,  அவனை தனது கையில்  உயரமாக தாங்கி  பிடித்தபடியே தண்ணீரில் மூழ்கினார். இதற்கிடையே மற்றொரு படகில் இருந்த  அவரது குடும்பத்தினர்  விரைந்து வந்து அவரது கையில் இருந்த 2 வயது  சிறுவனை உயிருடன் மீட்டனர். ஆனால் ரூசெல்ஸ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

More articles

Latest article