பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் இரவு ஊரடங்கு தொடரும் போதிலும் கிறிஸ்துமஸ் தின நள்ளிரவு பிரார்த்தனை நடத்த அரசு அனுமதித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கர்நாடகா மாநிலத்தில் டிசம்பர் 17 முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது.  இந்த இரவு நேர ஊரடங்கு 24 வரை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இன்று அந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவின்படி கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் முடிவடையும் இரவு நேர ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது.  ஜனவரி 2 காலை 5 மணியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவு நேரப் பிரார்த்தனைகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கொரோனா கட்டுப்பாட்டு வழிமுரைஅக்ளுடன் இந்த வழிபாடுகள் மற்றும் நள்ளிரவு நேரப் பிரார்த்தனைகள் நடத்தலம் எனக் கர்நாடக மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.