
சென்னை
பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமம் செயல்படுகிறது.
இங்கு நித்தியானந்தாவின் சீடர்கள் தங்கியுள்ளனர்.
அவர்கள் அந்தப் பகுதியில் இருககும் பெண்களை கேலி செய்வதாகவும், பெண்களிடம் ஆபாசமான முறையில் செய்கை காட்டுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில் இன்று நித்தியானந்தா ஆசிரமத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
அங்கிருக்கும் நித்தியானந்தா சீடர்களை வெளியேற்றுமாறு முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Patrikai.com official YouTube Channel